முகப்புகோலிவுட்

இது அண்ணன் போட்ட கொரோனா கோடு, தாண்டப்பிடாது.. வடிவேலுவின் முதல் ட்வீட்..!!

  | March 27, 2020 13:11 IST
Vadivelu

"கொரோணா வைரஸ் பரவாமல் இருக்க அரசு சொல்லின்படி நான் வீட்டில் இருக்கின்றேன்"

தமிழ் சினிமாவில் நீங்க இடம் பிடித்திருக்கும் 'வைகைப் புயல்' வடிவேலு மக்களிடையே காலத்தாலும் தனித்துவமான இடத்தை கொண்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோரால் அவரது படங்கள் பயன்படுத்தப்பட்டு, சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மீம்ஸை உருவாக்கப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு 'தெனாலிராமன்' படத் தயாரிப்பின் போது வடிவேலு ஒரு ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார், ஆனால் அதனை அவர் உபயோகப்படுத்தவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் மறுபிரவேசம் செய்தார். ஆனால், அதையடுத்து எந்த பதிவையும் அவர் போடவில்லை.

இந்நிலையில், அவர் தனது ரசிகர்களுக்கு முக்கியமான செய்தியை தமிழில் வெளியிட்டுள்ளார். ட்விட்டர் கணக்கைத் தொடங்கிய பிறகு பதிவிட்டுள்ள இந்த முதல் ட்வீட்டீல் “கொரோணா வைரஸ் பரவாமல் இருக்க அரசு சொல்லின்படி நான் வீட்டில் இருக்கின்றேன். நீங்கள் எல்லோரும் அது போல வீட்டுலயே இருக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் நன்றி வணக்கம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதுமாக ஊரடங்கில் இருக்கிறது. இந்த நேரத்தில் அவருடைய பதிவு இன்னும் சிலரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்