முகப்புகோலிவுட்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா.! மருத்துவமனையில் அனுமதி.!

  | August 05, 2020 15:51 IST
Sp Balasubramaniam

அவர் தற்போது சென்னையில் சூளைமேடுவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு லேசான நேர்மறையை பரிசோதித்ததாக பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான பாடகரான அவர் தற்போது சென்னையில் சூளைமேடுவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ்பிபி இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு பகிர்ந்துள்ளார். வீடியோவில், “கடந்த 2-3 நாட்களாக எனக்கு ஒரு சிறிய அசவுகரியம் இருந்தது, இது ஒரு பாடகருக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. சளி இருக்கிறது, குளிர் மற்றும் காய்ச்சல் வந்து வந்து செல்கிறது. இந்த விஷயங்களைத் தவிர எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நான் அதை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை” என்றார்.

மேலும் கூறுகையில் “மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன், இது கொரோனா வைரஸின் மிகவும் லேசான நேர்மறை என்று அவர்கள் சொன்னார்கள், அவர்கள் என்னை வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தல் தங்கியிருக்கலாம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்” என்றார்.

ஆனால் வீட்டில் தனியாக தங்குவது கடினம் என்பதால், குடும்பம் மிகவும் அக்கறை கொள்ளும் என்பதால், அவர் தன்னை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார், அநேகமாக இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கொரோனாவிலிருந்து மீண்டு வீட்டிற்கு வருவார் என்று வீடியோவில் அவரே நம்பிக்கையுடன் உறுதி செய்துள்ளார்.

மேலும், தான் நலமாக இருப்பதாகவும், தன் மீது அக்கரை கொண்ட அணைவருக்கும் நன்றி, அதற்காக அனைவரும் தொலைபேசியில் அழைத்து தன்னை நலம் விசாரிக்க வேண்டாம், மருத்துவமனைக்கு ஓய்வெடுக்கவே வந்துள்ள்தாகவும் கூறினார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com