முகப்புகோலிவுட்

"அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்" - இயக்குநர் சச்சிக்காக பார்த்திபனின் ட்வீட்..!!

  | June 19, 2020 21:56 IST
Sachi Passes Away

துனுக்குகள்

 • கடந்த சில தினங்களாக, இயக்குநர் சச்சி உடல்நலம் குன்றிய நிலையில்
 • இயக்குநரும் எழுத்தாளருமான சச்சி நேற்றிரவு காலமானார்
 • அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக
பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்'. தற்போது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்தின் இயக்குநரும் எழுத்தாளருமான சச்சி நேற்றிரவு காலமானார்.

கடந்த சில தினங்களாக, இயக்குநர் சச்சி உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் ஒரு மோசமான சுகாதார நிலைமையை எதிர்த்துப் போராடி வந்தார். ஒரு தனியார் மருத்துவமனையில் மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சச்சிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது ஒரு மயக்க மருந்து பிரச்சினை ஏற்பட்டு, அது அவரது மூளையை பாதித்துள்ளதாக  கூறப்பட்டது.

இந்நிலையில் அவரை குறித்தும் அவருடைய ‘அய்யப்பனும் கோஷியும்' படம் குறித்தும் பிரபல நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "அய்யப்பனும் கௌஷியும்'பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குநரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com