முகப்புகோலிவுட்

‘மாஸ்டர்’ விஜய் ஸ்டைலில் ஹர்பஜன் சிங்கின் ‘குட்டி ஸ்டோரி’.! தமிழில் ஒரு கொரோனா விழிப்புணர்வு ட்வீட்..!

  | March 25, 2020 14:03 IST
Harbhajan

ஹர்பஜன் சிங் ‘ஃப்ரண்ட்ஷிப்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காகவும், சங்கிலியை உடைப்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்திருந்தார். இந்த கட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கை எல்லோரும் ஆதரித்துவரும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஒரு ‘மாஸ்டர்' விஜய் ஸ்டைலில் ஒரு தமிழ் ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அவர், தான் சொல்லும் ‘குட்டி ஸ்டோரியை' கவனிக்குமாறு கெட்டுக்கொண்டு, நாம் தடைகளை உடைத்து உலகக் கோப்பையும் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளோம், மேலும் வீட்டில் தங்குவதன் மூலம் கொரோனா வைரஸை வெல்ல முடியும் என கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் சந்தானத்தின் ‘டிக்கிலோனா' போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார், மேலும் ‘ஃப்ரண்ட்ஷிப்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக் பிக் பாஸ் லாஸ்லியா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்