முகப்புகோலிவுட்

"ஒன்றிணைவோம். மாணவர்களோடு துணை நிற்போம்." - சூர்யாவின் அகரம் நிறுவனம்..!

  | September 20, 2020 08:25 IST
Students

துனுக்குகள்

 • இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
 • செப்டம்பர் 19-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று இதுவரை 22 ஆயிரம்
 • திட்டம் குறித்த தகவல்களை மக்களிடம் எடுத்துச் சென்ற ஒவ்வொருவருக்கும் நன்றி
தமிழகத்தில் நேற்று மட்டும் 66 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,751 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழலில் கல்வியை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு உதவி வருகிறது நடிகர் சூர்யாவின் அகரம் நிறுவனம்.  

இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "அகரம் பவுண்டேஷன்-ல் covid-19 (கொரோனா) காலக் கல்வி நிதியுதவி பெற செப்டம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அனுப்ப கேட்டிருந்தோம். தொலைபேசியிலும் நேரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தகவல் குறித்து கேட்ட வண்ணம் இருந்தனர். செப்டம்பர் 19-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று இதுவரை 22 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றில் சரியான நபர்களை கண்டறிந்து உதவி செய்வதே போதுமானதாக இருக்கும், எனவே விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்திக் கொள்கிறோம்." "திட்டம் குறித்த தகவல்களை மக்களிடம் எடுத்துச் சென்ற ஒவ்வொருவருக்கும் நன்றிகள். மாணவர்களின் கல்வி பாதியில் தடைபடாமல் இருக்க நாம் அனைவரும் அவரவர் அளவில் இயன்ற பங்களிப்பை அளித்து ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம்." என்று குறிப்பிட்டுள்ளது. 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com