முகப்புகோலிவுட்

"தடங்கல்.. அதை தடங்கள் ஆக்குவோம்" - ஹரிஷுக்கு தைரியம் சொன்ன விவேக்

  | April 04, 2020 16:59 IST
Vivek

துனுக்குகள்

 • கடந்த மாதத்தில் இருந்து வணிக வளாகங்கள் மற்றும் சினிமா அரங்குகள்
 • மீண்டும் சில படங்களை மறுமுறை ரிலீஸ் செய்யும் திட்டம்
 • காத்திருப்போம். காலம் கை கூடும். கனவுகள் நிறைவேறும்
உலகம் முழுதும் சுமார் 50,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளது கொரோனா நோய்த் தொற்று, இந்தியாவைப் பொறுத்தவரை 2000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் தாக்கத்தால் ஐம்பதிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் இந்த நோய் பரவாமல் இருக்கப் பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்தியாவில் ஏற்கனவே கடந்த மாதத்தில் இருந்து வணிக வளாகங்கள் மற்றும் சினிமா அரங்குகள் ஆகியவை சுகாதார நடவடிக்கைகள் கருதி தற்காலிகமாக மூடப்பட்டன. அது மட்டும் இல்லாமல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த மாத இறுதியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படங்களும் தடைப்பட்டன. இதனால் இந்த தடை விளக்கப்பட்டதும் மீண்டும் சில படங்களை மறுமுறை ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்நிலையில் இந்த தனிமையை தாடி வளர்த்து கழித்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யானை தேற்றும் வகையில் நடிகர் விவேக் ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த டீவீட்டில் "காத்திருப்போம். காலம் கை கூடும். கனவுகள் நிறைவேறும். வெற்றிக்கு தடங்கல் வரலாம். அதையே நாம் “தடங்கள்” ஆக்கி முன் செல்வோம்." என்று அவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com