முகப்புகோலிவுட்

வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தமிழ் நடிகர்கள்…?

  | April 18, 2019 15:11 IST
Robo Shankar

துனுக்குகள்

  • அஜித் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார்
  • விஜய், ஷாலினி இருவரும் நீலாங்கரையில் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்
  • சிவகார்த்திகேயன் ஓட்டு போடவில்லை
2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களது ஜனநாயகக்கடமையை ஆற்ற காலையில் இருந்தே ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலையில் அஜித், விஜய், ரஜினி, கமல், விஜய் சேதுபதி என முன்னணி நட்சத்திரங்கள் தங்களது ஓட்டை பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில் வாக்கு சாவடியில் இருக்கும் பதிவேட்டில் பெயர் இடம் பெறாததால் ஓட்டு போடாமல் வீடு திரும்பி இருக்கிறார்கள் நடிகர்கள் சிலர்…
 
காமெடி நடிகர்  ரோபோ சங்கர் சாலி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளார். அங்கு அவரிடம் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியிலில் பெயர் இடம் பெறாததால் வாக்களிக்காமல் திரும்பியுள்ளார் மேலும் அதிகாரிகள் யாரும் சரியான தகவலும் தெரிவிக்காமல் அலச்சியமாக இருக்கிறார்கள் என்று புலம்பிக்கொண்டே சென்றிருக்கிறார்.
 
இவரைப்போன்றே நடிகர் ரமேஷ் கண்ணா தனக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால் தனது ஓட்டை பதிவு செய்ய முடியாமல் வீடு திரும்பினார். இது குறித்து கேள்வி எழுப்பிய அவர். தேர்தல் ஆணையும் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்கு பதிவாக வேண்டும் என்று பிரச்சாரம் மட்டும் செய்தால் போதாது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்படி அலச்சியமாக இருப்பால் என்னை போன்று இன்னும் எத்தனை பேர் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய முடியாமல் சென்றிருப்பார்க்ள். என்று குற்றம் சாட்டி இருந்தார்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்