முகப்புகோலிவுட்

“எல்லோரும் போல் நானும் வாக்களித்துவிட்டு நல்லது நடக்கும் என்று காத்திருக்கிறேன்” விஜய் சேதுபதி

  | April 18, 2019 13:22 IST
Lok Sabha Elections 2019

துனுக்குகள்

  • சென்னை கோடம்பாக்கத்தில் விஜய் சேதுபதி வாக்களித்தார்
  • காலையிலே விஜய், அஜித், ரஜினி, கமல், உள்ளிட்டோர் வாக்களித்தனர்
  • 2ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடந்து வருகிறது
2 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்  இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்களோடு மக்களாக திரைத்துறை பிரபலங்கள் காலையில்லே ஆர்வமாக வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருக்கின்றனர்.
 
அஜித், ஷாலின், விஜய், ரஜினி, கமல், சிவக்குமார், கார்த்தி, ஜோதிகா பலர் காலையிலே வாக்கினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சரியாக 12 மணியளவில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாக்கினை பதிவு செய்தார்.
 
கோடம்பாக்கம் திரைத்துறையின் அதிகம் வசிக்கும் என்பதால்  திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த வாக்குச்சாவடிக்கு  வருவார்கள் என்பதால் இந்த பகுதியில் காவல் துறை பாதுகாப்பு சற்று கூடுதலாகவே இருந்து வருகிறது.
 
விஜய் சேதுபதி, கோடம்பாக்கம் வாக்குசாவடியில் விஜய் சேதுபதி தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்., அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக வாக்கு அளிக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். எல்லோரும் போல் நானும் வாக்களித்துவிட்டு   நல்லது நடக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.
 
மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வு அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  என்றார்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்