முகப்புகோலிவுட்

என்னடா தளபதி படத்துக்கு வந்த சோதனை..? மாஸ்டர் Track-List லீக்கானது..!!

  | January 28, 2020 15:28 IST
Master

துனுக்குகள்

  • மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ராக் லிஸ்ட் லீக்கானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'மாஸ்டர்' . விஜயின் இந்த 64-வது படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா ஜெரமியா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷன், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் மிரட்டலான #MasterThirdLook வெளியானது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் எதிரெதிரே வெறித்தனமான கோபத்தை காட்டும் இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்டர் படக்குழுவுக்கும், தளபதியின் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இது தான் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ராக் லிஸ்ட் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. Google-ல் தட்டினால் பத்து ட்ராக்குகள் கொண்ட அந்த லிஸ்ட் பின்னணிப் பாடகர்கள் பெயர்கள் மற்றும் டைட்டிலுடன் வருகிறது. ஆனால், அது உண்மையான லிஸ்ட் அல்ல, இப்படத்தின் ஆல்பம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகும் என திரைவட்டாரங்கள் அறிந்ததும், இது போலியான தகவல் என உறுதி ஆனது. மேலும், 3-வது லுக் போஸ்டரை அடுத்து, நிச்சயமாக அனிருத் இசையில் மாஸான சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்