முகப்புகோலிவுட்

சர்வதேச திரைப்பட விழாவிற்கு கார்த்தியின் ‘கைதி’ தேர்வு! மகிழ்ச்சியில் லோகேஷ் ட்வீட்.!

  | August 01, 2020 22:51 IST
Kaithi

பிளாக்வஸ்டர் 'கைதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தகது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘கைதி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.ஆர். பிரபு தயாரித்த இப்படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், கே.பி.ஒய் தீனா, ரமணா, பேபி மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சி.எஸ். சாம் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. கடந்த ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இப்போது, ஒரு இனிமையான செய்தி என்னவென்றால், இந்த ஆண்டு டொராண்டோவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IIFFT) ‘கைதி' படம் சிறப்பு திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மகிழ்ச்சியான செய்தியை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி, முழு அணிக்கும் பெரிய நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருவிழாவில் திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற படங்களில்,  தெலுங்கு விளையாட்டு-நாடகம் ‘ஜெர்சி', இந்தி படம் ‘சூப்பர் 30' மற்றும் மலையாள திரைப்படம் ‘டிரான்ஸ்' ஆகியவை அடங்கும்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘கைதி' திரைப்படம் ‘தளபதி' விஜய் நடித்த ‘பிகில்' படத்துடன் போட்டியிட்டு மெகாஹிட்டாக மாறியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தகது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com