முகப்புகோலிவுட்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘கமல்ஹாசன் 232’ மோஷன் போஸ்டர்..!!

  | September 22, 2020 21:30 IST
Kamal Haasan

‘கமல்ஹாசன் 232’ படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் மற்றும் ஆர்.கே.எஃப்.ஐ தயாரிக்கிறது.

கார்த்தி நடிப்பில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் ‘கைதி' படத்துக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி' விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சேர்ந்து நடித்த தனது ‘மாஸ்டர்' படத்தை முடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் தூண்டப்பட்ட பூட்டுதல்களால் அதன் திட்டமிடப்பட்ட வெளியீட்டை சந்திக்க முடியவில்லை.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் ‘வெனனென்று நினைத்தாய்' மற்றும் ‘கமல்ஹாசன் 232' என அழைக்கப்படும் படத்தை அறிவித்து தனது ரசிகர்களுக்கு இனிமையான ஆச்சரியத்தை அளித்தார்.

‘கமல்ஹாசன் 232' படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் மற்றும் ஆர்.கே.எஃப்.ஐ தயாரிக்கிறது. சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள இப்படம் 2021 கோடையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒரு ரசிகர் தயாரித்த மோஷன் போஸ்டர் லோகேஷின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதை இயக்குநர் லோகெஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஃபேன் மேட் மோஷன் போஸ்டராக இருப்பினும், படக்குழுவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டைப் போலவே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

லோகேஷ் தனது பதிவில் "இந்த அற்புதமான சைகைக்கு ரசிகர்களுக்கு நன்றி. கமல்ஹாசன் 232-ன் ரசிகர் தயாரித்த மோஷன் போஸ்டரை வழங்குவதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவில் ‘விஸ்வரூபம்' படத்திலிருந்து ‘எவனேன்று நினைத்தாய்' பாடல் பின்னணியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com