முகப்புகோலிவுட்

உலக நாயகனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்..!

  | November 05, 2019 12:16 IST
Kamal Hassan

துனுக்குகள்

  • கமலின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
  • மாநகரம், கைதி படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்
  • லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் தளபதி 64 படத்தை இயக்குகிறார்
லோகேஷ் கனகராஜ் தளபதி64 திரைப்படத்திற்கு பிறகு கமல் ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாநகரம்',‘கைதி' ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன், ஆண்டனி வர்கீஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட்டோர் முக்கிய கதப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜயின் பிகில் ரிலீசுக்கு முன்பே இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டதால், தற்போது அடுத்தக்கட்ட வேலைகள் முழுமூச்சாக நடைபெற்றுவருகிறது.

பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருந்தாலும், இரு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் இந்த கூட்டனிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கைதி பட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்கப்படும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், கைதி 2 படத்திற்குப் பிறகு சூரியாவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் சினி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதி ரிலீசுக்கு முன்பே, இப்படத்திற்காக கமலின் ராஜ் கமல் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில், தளபதி 64-க்குப் பிறகு எந்த படத்தை தொடங்குவார் என பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

கைதி பட ரிலீசுக்கு முன்பே சில பேட்டிகளில், கார்த்தியின் ‘டில்லி' கதாப்பாத்திரம் விருமாண்டி படத்தில் கமலின் சாயல் தான் எனவும், கமல் ஹாசன் தனக்கு மிகப்பெரிய முன்னோடி என்றும் ‘அவருடன் கூடிய விரைவில் இணைந்து வேலை பார்ப்பேன்' என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘தலைவன் இருக்கிறான்' படத்தையும் துவங்கவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தலுக்கும் தயாராகும் நிலையில், லோகேஷ் கனகராஜுடனான இந்த கூட்டணியைப் பற்றிய தகவல்களின் நிலைப்பாடு குறித்து விரைவில் தெரியவரும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்