முகப்புகோலிவுட்

‘மாஸ்டர்’ படத்தையடுத்து தெலுங்கில் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்.?

  | August 05, 2020 13:17 IST
Lokesh Kanagaraj

'மாஸ்டர்' வரும் தீபாவளி அல்லது 2021 பொங்கலுக்கு வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ‘மாநகரம்', ‘கைதி' போன்ற படங்களால் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். வளர்ந்துவரும் இயக்குநர் இப்போது தனது அடுத்த படமான ‘மாஸ்டர்' வெளியீட்டுக்காக தயாராக உள்ளார். இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இருப்பினும், தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக, படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ளது. அநேகமாக இபடம் வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

இப்போது, ‘மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் தொடர்பான திட்டங்களை மாற்றியுள்ளார் என்பது சமீபத்திய அறிக்கையாகும்.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாதுடன் கைகோர்க்க உள்ளார் என்றும், அப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால், இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது திட்டங்களை மாற்றியுள்ளாராம்.

அதாவது, ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடன் ‘அண்ணாத்த' படத்தில் பிஸியாக இருப்பதால், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பிரபலமான தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொழில்துறையைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும், ‘மாஸ்டர்' வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டதும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com