முகப்புகோலிவுட்

ராம் சரண் அல்லது மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்.?

  | August 06, 2020 16:10 IST
Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைவதற்கு முன் தெலுங்கில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றன.

கார்த்தி நடித்த ‘கைதி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்காக மிகவும் பிரபலமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படத்திற்காக மகேஷ் பாபு அல்லது ராம் சரணுடன் ஒன்றிணைய திட்டமிட்டுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வளர்ந்துவரும் இயக்குநர் இப்போது தனது அடுத்த படமான ‘மாஸ்டர்' வெளியீட்டுக்காக தயாராக உள்ளார். இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக, படத்தின் வெளியீடு தாமதமாகியுள்ளது. அநேகமாக இபடம் வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

இப்போது, ‘மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படம் தொடர்பான திட்டங்களை மாற்றியுள்ளார் என்பது சமீபத்திய அறிக்கையாகும். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாதுடன் கைகோர்க்க உள்ளார் என்றும், அப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் இருந்தன.

ஆனால், இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது திட்டங்களை சற்று மாற்றி ரஜினியுடன் இணைவதற்கு முன் தெலுங்கில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றன.

தற்போதைய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த தெலுங்கு படத்துக்காக ராம் சரண் அல்லது மகேஷ் பாபுவை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமீபத்திய தகவல்கள் குறித்த அதிகார்ப்பூர்வ தகவல்களுக்காக காத்திருப்போம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com