முகப்புகோலிவுட்

‘கைதி’ உலகளவில் வசூல் சாதனை..!!

  | November 12, 2019 15:12 IST
Karthi

துனுக்குகள்

 • கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
 • சாம் சி.எஸ் இப்ப்டத்துக்கு இசையமைத்துள்ளார்.
கார்த்தியின் ‘கைதி' திரைப்படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் கிளப்பில் இணைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘கைதி'. இப்படத்தில், அஞ்சாதே நரேன், கலக்கப்போவது யாரு தீனா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வெளியான 4 நாட்களுக்கு பெரிய ஆதரவைப் பெறாத இப்படம், தடைகளை உடைத்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று கூடுதலாக பல திரையரங்குகளை நாளுக்கு நாள் தன்வசம் இழுத்தது.

விஜயின் பெரிய பட்ஜெட் படமான ‘பிகில்'க்கு இணையாக களத்தில் இறங்கிய இப்படம், இரண்டாவது வார தொடக்கத்திலேயே விமர்சன ரீதியாகவும், வனிக ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில், தொடர்ந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தற்போது, வசூல் ரீதியாக புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ரூ. 27 கோடி செலவில் எஸ்.ஆர். பிரபுவால் தயாரிக்கப்பட்ட இப்படம், உலகளவில் ரூ. 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com