முகப்புகோலிவுட்

வனிதா வீட்டில் லாஸ்லியா-சேரன்! ஏன் இந்த திடீர் சந்திப்பு?

  | October 18, 2019 12:21 IST
Big Boss Tamil

துனுக்குகள்

  • லாஸ்லியா,சேரன், பாத்திமாபாபு உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்
  • வனிதாவின் மூத்த மகளுக்கு மஞ்சல் நீராட்டு விழா சமீபத்தில் நடிந்தது
  • பிக்பாஸ் போட்டி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிறது
பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படத்தி வந்த தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் போட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சி முடிந்தாலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.
 
 இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர் சிலர் கலந்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
பிக்பாஸ் போட்டியில் தனக்கு தோன்றுவதையெல்லாம் வெளிப்படையாக பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றவர் வனிதா. மக்களின் ஆதரவு கிடைக்காததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ஒரு கலவரத்தையே எற்படுத்தினார். தற்போது போட்டி முடிந்த நிலையில் தன்னுடைய மூத்த மகள் ஜோத்விகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினார். இதில் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் கலந்துகொண்டனர். சேரன், சேரன், பாத்திமாபாபு, லாஸ்லியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஜோத்விகாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர் . அப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்