முகப்புகோலிவுட்

"என் பெயருக்கு ஒரு உயிர் கொடுத்த நாள்" - தளபதிக்கு நன்றி சொல்லி நெகிந்த பிரபல நடிகர்..!

  | September 20, 2020 08:06 IST
Soundara Raja Actor

துனுக்குகள்

 • நடிகர் துல்கர் சல்மான், ஆர்யா உள்பட பல நடிகர்கள் நடிப்பு என்ற துறைக்கு
 • அதன் பிறகு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற படம் இவருக்கு
 • அவர் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "இன்று ..! இதே நாள் போன
நடிகர் துல்கர் சல்மான், ஆர்யா உள்பட பல நடிகர்கள் நடிப்பு என்ற துறைக்கு வருவதற்கு முன்பு பல முன்னனி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிஸ்டம் என்ஜினீயராக வேலைபார்த்து அதன் பிறகு சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக திரைத்துறையில் கால்பதித்தவர் தான் பிரபல நடிகர் சௌந்தர ராஜா. பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் மற்றும் ஆர்யா நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான வேட்டை என்ற படமே சௌந்தரராஜா நடித்து வெளியான முதல் படம். 

அதன் பிறகு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற படம் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர்களுடன் பல முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் இவர் தற்போது பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே கார்த்திக்கின் ஜிகிர்தண்டா படத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "இன்று ..! இதே நாள் போன வருஷம்  செப்டம்பர் 19, 2019 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.,தளபதி அண்ணா என் பெயருக்கு ஒரு உயிர் கொடுத்த நாள்..! என்றும் மறவேனோ இந்த நாளையும் என் அன்பு தளபதி விஜய் அண்ணனையும்..! Love you #Thalapathi #Vijay_anna" என்று குறிப்பிட்டுள்ளார். 

 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com