முகப்புகோலிவுட்

"நம்பிக்கை தருவதே நல்லரசு" - CAA குறித்து வைரமுத்து போட்ட ட்வீட்

  | February 27, 2020 14:05 IST
Caa Protest

அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள் ?

துனுக்குகள்

 • என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள் ?
 • கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் வைரமுத்து
 • CAA குறித்து வைரமுத்து போட்ட ட்வீட்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், அதே சமயம் ஆதரவாகவும் நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் CAA குறித்து நடந்த போராட்டத்தில் பல கலவரங்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை இந்த கலவரத்தில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

CAA குறித்து அவ்வப்போது திரை பிரபலங்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அந்த பதிவில் "எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள் ? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும்." என்று கூறி #CAA என்று குறிப்பிட்டுள்ளார். 

டெல்லி கலவரத்தில் சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள் ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com