முகப்புகோலிவுட்

மாநாடு படத்தில் இருந்து சிம்பு விலகல்! இயக்குநர் வெங்கட் பிரபு வருத்தம்!!

  | August 08, 2019 19:43 IST
Venkat Prabhu

துனுக்குகள்

  • சிம்பு மாநாடு படத்தில் இருந்து விலகல்
  • இயக்கநர் வெங்கட் பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார்
  • மீண்டும் புது கதாநாயகன் மூலம் படம் உருவாகும்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் ‘மாநாடு'. கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில்  படப்பிடிப்பு தள்ளி போனது. கிட்டதட்ட பல மாதங்கள் ஆன நிலையில் இப்படத்தை கைவிடுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

   
அதில் ‘மாநாடு படம் புது பரிமானத்துடன் உருவாகும், காலதாமதம் காரணமாக நம்பர் சிம்பு இந்த படத்தில் இருந்து சிம்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “ எனது சகோதரர் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து பணியாற்றமுடியாமல் போனது வருத்தத்தை அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் காலம் மிக முக்கியமானது. தயாரிப்பாளர் அனுபவித்த மனரீதியிலான மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களால் அவரது முடிவுக்கு மரியாதை செலுத்த வேண்டியது கடமை. அனைவரது அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்