முகப்புகோலிவுட்

மீண்டும் “மாநாடு” படத்தில் இணையும் சிம்பு! நடந்தது என்ன?

  | August 19, 2019 17:40 IST
Maanaadu

துனுக்குகள்

 • சுரேஷ் காமாட்சி இன்று பிறந்த நாள் காண்கிறார்
 • மீண்டும் சிம்பு மாநாடு படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது
 • அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மாநாடு படம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் சிம்பு இந்த படத்தில் இணையவிரப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
 
அரசியலை மைய்யப்படுத்தி இயக்குநர் வெங்ட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த படம் “மாநாடு”. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்தார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார்.  ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் காலம் கடந்துக்கொண்டே இருந்தது. இதனால் இப்படத்தை கைவிடப்போவதாக படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதே சமயம் வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். அதே போல் நடிகர் சிம்பு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு படத்தில் மீண்டும் இணைய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் சுரேஷ் காமாட்சி - வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணி இணைந்து விரைவில் மாநாடு படத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com