முகப்புகோலிவுட்

தர்பார் எப்படி? ஒரே வார்த்தையில் முடித்த சிம்பு..!

  | January 09, 2020 14:36 IST
Darbar Fdfs

துனுக்குகள்

 • ரஜினியின் தர்பார் திரைப்படம் இன்று வெளியாயுள்ளது.
 • இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
ரஜினியின் தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், பல திரையுலக பிரபலங்கள் FDFS பார்த்துள்ளனர்.

தர்பார் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர், லிங்குசாமி, கவுதம் வாசுதேவ் மேனன், லாரன்ஸ் உள்ளிட்ட பட பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துள்ளனர்.

அதேபோல், நடிகர் சிம்பு சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ கோபால கிருஷ்ணா திரையரங்கில் தர்பார் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துள்ளார். படம் முடிந்து வெளியே வந்த அவரிடம், படம் குறித்து மீடியா நன்பர்கள் கேட்டதற்கு “சூப்பர், சூப்பர், சூப்பர்...” என ஒரே வார்த்தையை பல முறைக் கூறிவிட்டு கிளம்பினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வரலாகிறது.
ரஜினியின் ‘தர்பார்' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தற்போது உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com