முகப்புகோலிவுட்

விசா சிக்கலில் மாதவன்- அனுஷ்கா; அமெரிக்கா செல்ல முடியாமல் தவிப்பு..?

  | May 27, 2019 19:27 IST
Madhavan

துனுக்குகள்

  • ஹேமந்த் மதுகர் இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறுகிறது
  • இந்த படத்தில் மாதவனுடன் அனுஷ்கா நடிக்கிறார்
இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் மாதவன் அனுஷ்கா நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சைலன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாதவனுடன் ‘ரெண்டு' படத்தில் அறிமுகமான அனுஷ்கா அதன் பின் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
 
தற்போது அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம்'சைலன்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர்களுடன் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு அங்கு தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அனுஷ்கா - மாதவன் அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்