முகப்புகோலிவுட்

அலைபாயுதே படத்தின் 2-ஆம் சகாப்தம் : பூரித்த மாதவன் மற்றும் பி.சி. ஶ்ரீராம்

  | April 15, 2020 16:13 IST
Madhavan

என்னையும் இந்த படத்தின் நினைவுகளையும் உயிரோடு வைத்திருந்த அனைவருக்கும் நன்றி- மாதவன்

மணிரத்னம் இயகத்தில் 2000-ல் வெளியான ‘ அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான இப்படன் நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவுசெய்தது. 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றான இந்த சூப்பர்ஹிட் படத்தை ரசிகர்கள் நேற்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷாலினி நடித்தார். இன்றுவரை நினைவில் கொள்ளும் இந்த பாடல் மற்றும் பின்னணி இசையை ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும், பி.சி. ஶ்ரீராமின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்தது.   

நேற்று, உலகெங்கிலும் உள்ள மணிரத்னம் மற்றும் மாதவனின் ரசிகர்கள் இப்படத்தை சமூக ஊடகங்களில் கொடாடியதையடுத்து, மாதவன் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூட ட்விட்டரில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

மாதவன் தனது ட்வீட்டில் “எனது முதல் படம் வெளியானதிலிருந்து பறந்த 20 ஆண்டுகள். #20yearsofalaipayuthey. என்னையும் இந்த படத்தின் நினைவுகளையும் உயிரோடு வைத்திருந்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

அதேபோல் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், அப்படத்தில் இடம் பெற்ற பிரபலமான “சக்தி, நான் உன்னை வவிரும்பல, உன்மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கனு நினைக்கல, ஆனா, இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு” எனும் காதலை சொல்லும் வசனத்தை பகிர்ந்து,  “ஏப்ரல் 14 - அலைபாயுதேவின் இரண்டு தசாப்தங்கள், உலகெங்கும் உள்ள பார்வையாளர்களின் மனதில் புதிதாக அப்படியே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்..

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com