முகப்புகோலிவுட்

விரைவில் நேரடி OTT வெளியீட்டை காணும் மாதவன் படம்; விவரம் உள்ளே.!

  | September 18, 2020 15:37 IST
Maara Movie

‘மாறா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துளார்.

நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘விக்ரம் வேதா' படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு ‘மகளிர் மட்டும்' படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார்.

அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திக்கொண்டு ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு' படத்தில் பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில், 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட ‘சார்லி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘மாறா' என்ற திரைப்படத்தை மாதவன் முடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா' படத்தில் இணைந்து நடித்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்துள்ளார்.

rch2opu8

‘மாறா' பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், இப்படத்தை தயாரித்துள்ள பிரமோத் ஃபிலிம்ஸ், அமேசான் பிரைமுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த படம் விரைவில் நேரடியாக OTT தளத்தில் வெளியீட்டைக் காணவுள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாறா' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷிவதா, மௌலி, அலெக்சாண்டர் பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துளார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com