முகப்புகோலிவுட்

“ஆயுத எழுத்து” படத்திற்கு பின் மாதவனுடன் இணையும் சூர்யா!

  | August 12, 2019 19:15 IST
Madhavan

துனுக்குகள்

  • மூன்றாவது முறையாக சிம்ரன் இப்படத்தில் மாதவனுடன் சேர்ந்து நடிக்கிறார்
  • ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாதவனும் சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர்
  • இஸ்ரே விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் படம் இது
முதல் முறையாக நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ‘ராக்கெட்ரி' என்னும் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
நடிகர் மாதவன் இஸ்ரே விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யப்படுத்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த படத்தில் அவரே நம்பி நாயரணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியா சிம்ரன் நடிக்கிறார். ‘பார்த்தாலே பரவசம்', ‘கன்னத்தில் முத்தமிட்டாய்' உள்ளிட்ட படங்களில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது மூன்றாவது முறையாக இப்படத்தில் மாதவனுடன் இணைகிறார் சிம்ரன்.
 
மேலும் இப்படத்தில் “கேம் ஆப் த்ரோன்ஸ்” தொடரில் நடித்த ரான் டொனச்சியும், “டௌண்டன் அப்பே” தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளார்.
 
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து' திரைப்படத்தில் மாதவனும், சூர்யாவும் சேர்ந்து நடித்திருந்தனர். அதன் பிறகு தற்போது மீண்டும் இப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளனர் சூர்யாவும் மாதவனும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com