முகப்புகோலிவுட்

ரசிகர் ஒருவரின் மதரீதியான கேள்விக்கு மாதவன் அதிரடி பதில்!

  | August 17, 2019 14:35 IST
Madhavan

துனுக்குகள்

 • “ராக்கெட்ரி" படத்தை மாதவன் இயக்கி வருகிறார்
 • இப்படத்தில சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
 • தன்னுடைய ரசிகருக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் இவர்
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயகக்கி வருகிறார் நடிகர் மாதவன்.  “ராக்கெட்ரி” என்கிற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில்  மாதவன் நம்பி நாராயணனாக நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இந்நிலையில் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஆவணி அவிட்டத்தைத் தனது வீட்டில் கொண்டாடியுள்ளார் மாதவன். அதன்  புகைப்படங்களைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தில் இந்து கடவுள்கள் புகைப்படம் இருக்கும் இடத்தில் ஒரு சிலுவையும் இருந்துள்ளது. இதனை உற்று கவனித்த ரசிகர் ஒருவர், "பின்னணியில் ஏன் இந்து கடவுள்களுடன்  சிலுவை இருக்கிறது. அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்துக் கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்" என்று விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
 
 
இதற்க பதிலளித்துள்ள மாதவன், உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அந்த புகைப்படத்தில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். நான் எம்மதமும் சம்மதம் உடையவன். என் மகனம் அப்படித்தான் வளர்கிறான் நானும் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். இந்து கோயில் மட்டும் அல்ல தேவாலையங்கள், தர்காக்களிலில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் வரும், வந்துக்கொண்டிருக்கிறது.
 
அங்கிருந்து எனக்கு பரிசுகள் வரும், நான் விருப்பட்டும் சிலவற்றை வாங்கி இருக்கிறேன்., எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்றும் மாதவன் பதிலளித்துள்ளார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com