முகப்புகோலிவுட்

பா. ரஞ்சித் வெளியிட்ட 'V1' ட்ரைலர்..!

  | December 18, 2019 14:05 IST
V1 Murder Case

துனுக்குகள்

 • V1 திரைப்படத்தை பாவேல் நவகீதன் இயக்கியுள்ளார்.
 • இப்படத்துக்கு ரோனி ரஃபேல் இசையமைத்துள்ளார்.
 • இப்படம் உண்மைச் சம்பவங்களை வைத்து உருவக்கப்பட்டுள்ளது
இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் 'V1' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை நேற்று வெளியிட்டார்.

வடசென்னை, மெட்ராஸ், மகளிர் மட்டும் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்த பாவேல் நவகீதன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'V1 murder Case'. இப்படத்தை அரவிந்த் தர்மராஜ், என்.ஏ. ராமு, சரவணன் பொன்ராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா பிள்ளை, காயத்ரி, லிஜேஷ், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்துக்கு ரோனி ரஃபேல் இசையமைத்துள்ளார். மேலும், கிருஷ்ணசேகர் TS ஒளிப்பதிவு செய்ய, CS பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் நேற்று வெளியானது. அதனை, பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த விறுவிறுப்பான ட்ரைலர் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com