முகப்புகோலிவுட்

"என் இதயத்தில் தனி இடம் உண்டு" - ‘மதராசப்பட்டினம்' குறித்து மனம்திறந்த 'துரையம்மா'..!!

  | July 10, 2020 10:28 IST
10 Years Of Madharasappatinam

துனுக்குகள்

 • ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் கடந்த 2010 ஆண்டு வெளியான
 • இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல மாடல் அழகியும்
 • மதராசபட்டினத்திற்கு எனது இதயத்தில் எப்போதும் தனி இடம் உண்டு
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் கடந்த 2010 ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘மதராசப்பட்டினம்'. இந்த படம் ஆர்யாவிற்கு ஒரு பிரேக்கிங் பாயிண்டாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல. அதே போல இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான எமி ஜாக்சன். சூப்பர்ஸ்டாரின் எந்திரன் 2.0 உள்பட 15 படங்களில், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் மதராசபட்டினம் படமே இவரின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று இந்த திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்ததை படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்யா தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நினைவுகூர்ந்தார். அதே சமயம் இந்த படம் குறித்த ஒரு சுவாரசிய தகவலையும் இப்படத்தின் இயக்குநர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை எமி ஜாக்சன், இந்தியா மீதும் திரையுலகம் குறித்தும் எனக்கு கிடைத்த சுவையான அனுபவத்திற்கு 10 வயது ஆகின்றது. மேலும் மதராசபட்டினத்திற்கு எனது இதயத்தில் எப்போதும் தனி இடம் உண்டு என்று கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com