முகப்புகோலிவுட்

பா.இரஞ்சித்தை கைது செய்யக்கூடாது; உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு!

  | June 19, 2019 17:29 IST
Pa Ranjith

துனுக்குகள்

  • மதுரைகிளை உயர் நீதிமன்றத்தில் பா.இரஞ்சித் வழக்கு தொடத்திருந்தார்
  • நாளை மறுநாள் வரை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்
  • பா.இரஞ்சித் ரஜினியின் கபாலி,காலா ஆகிய படங்ளை இயக்கியவர்
சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்,
பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகள் பற்றியும், நில அபகரிப்பு பற்றியும் ஆய்வாளர்களின் தரவுகளின் அடிப்படையில் பேசியிருந்தார். ராஜராஜன் சோழன் காலத்தில் உழைக்கும் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது குறித்தும் பேசியிருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து சிலர் அவரை கைது செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தனர். வரலாற்று ஆய்வாளர்களின் தரவுகளை கொண்டே இந்த கருத்தை பேசியதாகவும், புதிதாக எதையும் பேசவில்லை என்று முன்ஜாமீன் கேட்டு இரஞ்சித் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
 
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை மறுநாள் வரை இயக்குநர் பா.இரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என்று கூறி வழக்கை  ஒத்திவைத்தது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்