முகப்புகோலிவுட்

'முதலிடம் பிடித்த மாஃபியா அத்தியாயம் 1' - மகிழ்ச்சியில் படக்குழு

  | February 24, 2020 12:46 IST
Mafia Chapter 1

அருண்விஜய் திரையுலக வாழ்க்கையில் இது அதிகப்படியான முதல் வார இறுதி வசூல் என்ற சாதனையை பதிவு செய்துள்ளது

துனுக்குகள்

 • அதிகப்படியான முதல் வார இறுதி வசூல்
 • 'முதலிடம் பிடித்த மாஃபியா அத்தியாயம் 1'
 • அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவனி சங்கர்
துருவங்கள் 16 என்ற படத்தை இயக்கி பலதரப்பட்ட ரசிகர்களையும், சினிமா ஜாம்பவான்களையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவருடைய இரண்டாவது படைப்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் வெற்றி நடைபோடுகின்றது மாஃபியா அத்தியாயம் 1. 

அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவனி சங்கர் ஆகிரியோரின் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் ஒரு போதைப்பொருள் தொழில் செய்யும் மாஃபியாவிற்கும் அதை தடுக்க போராடும் ஒரு போதைப்பொருள் தடுப்பு அதிகரிக்கும் இடையில் நடக்கும் போராட்டமே கதைக்களம். கலவையான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்றுள்ள போதும் வேறு எந்த போட்டி திரைப்படங்களும் இல்லாததால் முதல் வார இறுதி தமிழக வசூலாக ஒரு கோடியே இருபத்தி ஆறு லட்சத்திற்கும் அதிகமாக மாபியா திரைப்படம் வசூலித்துள்ளது. 

நடிகர் அருண்விஜய் திரையுலக வாழ்க்கையில் இது அதிகப்படியான முதல் வார இறுதி வசூல் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com