முகப்புகோலிவுட்

‘மஹா’ படத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக்! சினிமா பெட்டியில் இன்று..

  | January 03, 2020 12:33 IST
Cinema Petti

துனுக்குகள்

 • மஹா திரைப்படத்தில் சிம்பு- ஹன்ஷிகா மோத்வானி நடிக்கின்றனர்.
 • மரிஜுவானா திரைப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.டி. ஆனந்த் இயக்குகிறார்.
 • சந்தானத்தின் ‘டகால்டி’ திரைப்படத்தை விஜய் ஆனந்த் இயக்குகிறார்.
இன்றைய சினிமா பெட்டியில், ‘மஹா' படத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக், விஷ்ணு விஷால் ஸ்டூடொயோஸின் புதிய லோகோ, ‘மரிஜுவான' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டகால்டி பட சிங்கிள் ட்ராக் வெளியீடு உள்ளிட்ட சினிமா செய்திகளைப் பார்க்கலாம்...

விஷ்ணு விஷாலின் புதிய ப்ரொடக்‌ஷன் லோகோ..!
52e37rhg

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர். அதையடுத்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப் பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, ராட்ச்சசன் உள்ளிட்ட பல படங்களில் மாறுபட்ட கதைகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். இவர் நடிகர் மட்டுமல்லாது, சொந்த ப்ரொடக்‌ஷன் கம்பெனியின் மூலம் படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். விஷ்ணு விஷால் ஸ்டூடொயோஸ் என தன் பெயரிலேயே ஆறம்பித்த அவர், தனது ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்ப்டத்தி முதன் முதலாக தயாரித்தார். அதன் பிறகு கதாநாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களை தயாரித்தார். தற்போது ‘ஜகஜாலக் கில்லாடி' மற்றும் ‘எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், புத்தாண்டை முன்னிட்டு தனது ப்ரொடக்‌ஷன் கம்பெனியின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளார்.

‘மஹா' எஸ்.டி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
sovka148

யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி மற்றும் சிம்பு இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மஹா'. இப்படம் ஹன்ஷிகாவுக்கு 50-வது திரைப்படமாகும். இப்படத்தை Etcetera Entertainment பேனரில் வி. மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.  இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இப்படம் 25-வது திரைப்படமாகும். ஹன்ஷிகா சாமியார் வேடத்தில் கஞ்சா அடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதையடுத்து ஹன்ஷிகாவும் சிம்பும் இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வர்வேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் ச்ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பைலட் உடையில் இருக்கும் சிம்புவின் இந்த புது லுக் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
யோகி பாபு வெளியிட்ட மரிஜுவானா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
gas10o1g

அறிமுக இயக்குனர் எம்.டி. ஆனந்த் இயக்கும் திரைப்படம் ‘மரிஜுவானா'. போதைப் பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இந்த சமூகம் எப்படி சீரழிகிறது என்று எடுத்துக்கூறம் படமாக இப்படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பர்த்தலோம் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசைப்பள்ளியில் பயின்ற கார்த்திக் குரு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை காமெடி நடிகர் யோகி பாபு வெளியிட்டார்.

சந்தானத்தின் ‘டகால்டி' பட சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது..!
c9djsn3g

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் டகால்டி. ஹேண்ட் மேட் பிலிம்ஸ் பேனரில், எஸ்‌.பி. சௌத்ரியின் 18 ரீல்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடிக்கிறார். சந்தானத்துடன் சேர்ந்து மேலும் கலாய்க்க இப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, டி. எஸ். சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும், இப்படத்துக்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘பாரேன் பாரேன்' எனும் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com