முகப்புகோலிவுட்

'இவர் எப்படிப்பட்ட போலிஸ்ன்னு தெரியல..?' - காவலராக களமிறங்கும் ஸ்ரீகாந்த்

  | February 19, 2020 17:30 IST
Maha

2002ம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த ஸ்ரீகாந்த்

துனுக்குகள்

 • 'இவர் எப்படிப்பட்ட போலிஸ்ன்னு தெரியல'
 • 2002ம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம்
 • படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் STR நடித்துள்ளார்

கடந்த சில காலமாக ஹன்ஷிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு கதையில் ஹன்ஷிகா நடித்து வருகிறார். மஹா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் STR நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் ஸ்ரீ காந்த் நடித்துள்ளார். 


2002ம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த ஸ்ரீ காந்த் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் வெறும் 9 படங்கள் மட்டுமே பிற மொழிகளில் நடித்துள்ளார் ஸ்ரீ காந்த். தனது முதல் படமான ரோஜா கூட்டத்தில் நடித்தற்காக ITFA எனப்படும் சிறந்த நடிகருக்கான International Tamil Film Awards பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஜா கூட்டம், மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், வர்ண ஜாலம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. 

கடத்த சில வருடங்களாகப் பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் இந்த 2020ம் ஆண்டு இவர் நடிப்பில் உன் காதல் இருந்தால், மகா, காக்கி, மிருகா மற்றும் சம்பவம் போன்ற படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன.   விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com