முகப்புகோலிவுட்

70% சம்பள குறைப்புக்கும் நான் ரெடி: நடிகர் மஹத் அறிக்கை…

  | May 12, 2020 14:16 IST
Mahat Raghavendra

மஹத் தற்போது 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' மற்றும் 'இவன் தான் உத்தமன்' ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார்.

பூட்டுதலைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க திரையுலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், படப்பிடிப்பு மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்தாலும், தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சிக்கல்களையும், தாக்கத்தையும் குறைக்க சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, அடுத்தடுத்த வெளிவரவுள்ள தனது மூன்று படங்களுக்கான சம்பளத்தில் 25% குறைப்பதாக முதலில் அறிவித்தார். அதையடுத்து, ஹர்ஷ் கல்யாண் உட்பட பல நடிகர் நடிகைகள் பலரும் இதைப் பின்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மேலும் ஒரு இளம் நடிகர் தன் சம்பளத்தை அதிக பட்சமாக 70 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதாக முன்வந்துள்ளார். 'மங்காத்தா', 'ஜில்லா' போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. அதையடுத்து பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழிலும் அவர் பங்கேற்று ரசிகர்களைக் கூட்டினார். அவர் தற்போது, தயாரிப்பாளர்களின் முடிவின்படி தனது சம்பளத்தை குறைக்க தயாராக இருப்பதாக வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இன்று நம் சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழ்நிலையில், ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி சார் மற்றும் பலர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஊதியக் குறைப்புக்கு முடிவு செய்துள்ளனர். இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையின் ஒரு பகுதியாக இருக்கிறேன். நான் நிறைய கதாபாத்திரங்கள் செய்துள்ளேன், இப்போது நான் 2 படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். இந்த பூட்டுதலால் தொழிலாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், இயக்குநர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தான். அவர்கள் மூவரும் ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைப் பற்றி விவாதித்து முடிவு செய்தால், அது 20%, 50% அல்லது 70% குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஊதியக் குறைப்பை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.”

மேலும் பேசிய அவர் “என்னைப் போல் வளர்ந்துவரும் நடிகர்களும் கண்டிப்பாக ஒத்துழைப்பாங்க-னு நான் நம்புகிறேன். மேலும் என்னறைக்குமே ஒரு நடிகனுக்கு சம்பளத்தையும் தாண்டி, நிறைய படங்கள் பண்ணனும், நிறைய கதாப்பாத்திரங்கள் பண்ணனும், இன்னும் நிறைய மகிழ்விக்கனும் என்பது து ஒரே ஆசையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மஹத் தற்போது 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' மற்றும் 'இவன் தான் உத்தமன்' ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com