முகப்புகோலிவுட்

6 பேக்ஸுடன் நிற்கும் மஹத்..! ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்ட ‘இவன் தான் உத்தமன்’ #surprisebirthdaylook

  | February 18, 2020 16:26 IST
Mahat

நாளை (பிப்ரவரி 18-ஆம் தேதி) பிறந்தநாள் கொண்டாடும் மஹத்துக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக இப்படத்திலிருந்து ஒரு போஸ்டரை #surprisebirthdaylook என இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

நாளை பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மஹத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘இவன் தான் உத்தமன்' திரைப்படத்திலிருந்து #surprisebirthdaylook என்ற போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்த மஹத் ராகவேந்திரா மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இவன் தான் உத்தமன்'. இப்படத்தை மக்வென் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

ரொமாண்டிக் ட்ராமா கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படத்தைப் பரதன் பிக்சர்ஸ் பேனரில் ஆர்.வி. பரதன் தயாரிக்கிறார். இப்படத்துக்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிற இத்திரைப்படத்திற்காக STR பாடியுள்ள ‘டேய் மவனே' எனத் தொடங்கும் ‘உத்தனம் ஆன்தம்' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாளை (பிப்ரவரி 18-ஆம் தேதி) பிறந்தநாள் கொண்டாடும் மஹத்துக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக இப்படத்திலிருந்து ஒரு போஸ்டரை #surprisebirthdaylook என இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். மேலும் மஹத் வெளியிட்ட சிக்ஸ் பேக்ஸ் ஒர்க்கவுட் வீடியோவும் வைரலாகி வருகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்