முகப்புகோலிவுட்

விக்ரம் நடிப்பில் 300 கோடியில் உருவாகும் ‘மகாவீர் கர்ணா’

  | February 11, 2019 18:30 IST
Vikram Mahavir Karna

துனுக்குகள்

  • இப்பத்தில் கர்ணனாக நடிக்கிறார் விக்ரம்
  • இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார்
  • இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது
‘சாமி 2' திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படம்  ‘கடாரம் கொண்டான்'. இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது மகாவீர் கர்ணா படத்தில் இணைந்துள்ளார்.
 
இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.  மகாவீர் கர்ணா படத்தை மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்' படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார். மகாபாரத கதையில்  இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது.
 
இதில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இதுகுறித்து பேசிய  இயக்குநர் ஆர்.எஸ்.விமல், “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது.மகாவீர் கர்ணா தொடங்கியது. சிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இப்படம் 32-க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. சரித்திர கதையில் நாயகனாக விக்ரம் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்