முகப்புகோலிவுட்

என்னை CM ஆக்குங்க மோடி ஜி, ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் சரிசெய்கிறேன்: சவால் விடும் மீரா மிதுன்.!

  | June 18, 2020 12:49 IST
Pm Modi

"3 மாத ஊழல் ஒழியும், 6 மாதங்களின் இந்திய பொருளாதாரம் உயரும்”

தமிழ் நாட்டு அரசாங்கத்தை கலைத்து, தன்னை முதலவராக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகை மீரா மிதுன் வேண்டுகோள் விடுத்து போட்ட ட்வீட் தற்போது செம வைரலாகிவருகிறது.

மாடல் அழகியும் - நடிகையுமாக மீர மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏரி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார். தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை, அரசியல் தொடர்பான கருத்துக்களையும் அடிக்கடி பதிவிட்டுத் தொடர்ந்து சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார்.

எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மீரா மிதுன், நேற்று மாலை பதிவிட்ட ட்வீட் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதில் “பயனற்ற அரசு! தமிழ்நாடு அதன் பார்வை அழிவில். பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக அரசாங்கத்தை கலைக்கவும். ஒரு ஆணையை நிறைவேற்றி, என்னை முதல்வராக்குங்கள். ஒரு வாரத்தில் நான் முழு சூழ்நிலையையும் கட்டுக்குள் கொண்டு வருகிறேன், மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறேன், 1 மாதத்தில் அனைத்து குற்றவாளிகளும் சிறையில் இருப்பார்கள், 3 மாத ஊழல் ஒழியும், 6 மாதங்களின் இந்திய பொருளாதாரம் உயரும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன் என்ன பதிவிட்டாலும் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள், இந்த பதிவிற்கு மட்டும் சும்மா இருப்பார்களா.? 200-க்கும் மேற்பட்ட கமண்ட்ஸ் குவிந்துவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com