முகப்புகோலிவுட்

“சியான் வராரு வழியை விடு!!” நாளை வெளியாகிறது ‘கோப்ரா’ ஃபர்ஸ்ட் லுக்..!

  | February 27, 2020 09:43 IST
Vikram

துனுக்குகள்

  • கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
  • விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

டிமான்ட்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா'. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இயக்குநர்க் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வைகோ 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிவருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் செம வைரலானது.

அதையடுத்து இப்படம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், நேற்று இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து சிறப்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதாவது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் விக்ரமின் முகம் மறைக்கப்பட்டு அவரின் ஹேர்ஸ்டைல் மற்றும் நரம்புகள் புடைக்கக் கட்டுமஸ்தான உடல் தெரியும்படியும் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்

.

‘சியான்' விக்ரமுக்கு எப்போதுமே வயது வரம்பின்றி பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் விக்ரம் 12 கேரக்டரில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதையைப் பற்றியோ, கதாபாத்திரம் பற்றியோ எந்த தகவலும் வெளிவராத நிலையில், இப்படத்துக்கு ஏகபோகமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்