முகப்புகோலிவுட்

"பாவம்.. சாபம்.. லாபம்.." - அசத்தலாக வெளியான மக்கள் செல்வனின் 'லாபம்' பட ட்ரைலர்..!

  | August 22, 2020 19:19 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • திரைப்படத்தின் புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை
 • கொரோனா காரணமாக பல பிற படங்களைப் போல லாபம் படமும் Post productions
 • இந்நிலையில் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படத்தின்
ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை கொடுத்து அமர்களப்படுத்தி வரும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், இடம் பெருள் ஏவல், ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துவருகிறார். டி.இமான் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
 
கொரோனா காரணமாக பல பிற படங்களைப் போல லாபம் படமும் Post productions பணிகள் நடைபெறும் தருணத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது அண்மைக்காலமாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி தன்னுடைய டப்பிங் பணிகளை அண்மையில் துவங்கினர். மேலும் நடிகர் கலை அவர்களும் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கினார். 

இந்நிலையில் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்த படம் உருவாகி உள்ளதை ட்ரைலர் தெளிவுபடுத்துகிறது. அனல் பறக்கும் இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com