முகப்புகோலிவுட்

'தண்ணீரும்.. காற்றும்..!!' : உலக அரசியல் பேசும் க/பெ. ரணசிங்கம் - 'மிரட்டலாக வெளியான டீஸர்..'

  | May 23, 2020 20:21 IST
Ka Pae Ranasingam

துனுக்குகள்

 • தற்கால தமிழ் சினிமா உலகின் தவிர்க்கமுடியாத நடிகராக மாறிவிட்டார்
 • தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ளது
 • மிக ஆழமாக பதிவிடும் இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது
தற்கால தமிழ் சினிமா உலகின் தவிர்க்கமுடியாத நடிகராக மாறிவிட்டார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் இந்த நடிகரின் நடிப்பு அனல் பறக்கிறது. தான் பல சறுக்கல்களுக்கு வட்டியும் முதலுமாக வெற்றி வெற்றிகள் குவித்து வருகின்றார். அண்மைக்காலமாக தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் இனவாத நடித்து வருகின்றார்.  

இந்த 2020ம் ஆண்டு மட்டும் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், புஷ்பா என்று 10-க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் நடித்து அசத்தி வருகின்றார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ளது 'க/பெ. ரணசிங்கம்' என்ற திரைப்படம். 

விருமாண்டி என்பர் இயக்க இந்த படத்தின் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரபல ஊடக ஆசிரியர் பாண்டே இந்த படத்தில் நடித்துள்ளனர். தண்ணீர் பிரச்சினையை மிக ஆழமாக பதிவிடும் இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com