முகப்புகோலிவுட்

‘மக்கள் செல்வன்’ மட்டும் சும்மா இருப்பாரா.! திரைப்பட தொழிலாளர்களுக்கு விஜய் சேதுபதி நிதியுதவி..!

  | March 25, 2020 08:32 IST
Vijay Sethupathi

விஜய் சேதுபதி சமீபத்தில் தான் விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன, மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவுமாறு FEFSI தலைவர் ஆர்.கே.சல்வமணி நேற்று, நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட சகோதரத்துவத்திடம் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளையடுத்து மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கினர். அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ .10 லட்சம் அளிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சார்பில் சுமார் 150 அரிசி மூட்டைகளைக் கொடுத்து உதவியுள்ளார்.

அதையடுத்து நம் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வேலையின்றி வாடி வரும் FEFSI உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 லட்சத்தைக் கொடுத்துள்ளார். இந்த செய்தியை PRO ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி சமீபத்தில் தான் நடித்த ‘நானும் ரவுடி தான்' திரைப்படத்தில் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த லோகேஷ்-க்கு மருத்துவச் செலவுக்கு நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி சமீபத்தில் தான் விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்தார். அதையடுத்து உடனே தனது ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும், விஜய் சேதுபதி அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிக்கத் தயாராகிவருவதாகத் தகவல் வெளியானது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com