முகப்புகோலிவுட்

பசுமை சவாலை ஏற்று மரக்கன்று நட்ட விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ..!

  | July 27, 2020 18:45 IST
Vijay Sethupathi

டோலிவுட் இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'உப்பெனா' திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி

டோலிவுட் பிரபலங்களான நாகார்ஜுனா, பிரபாஸ், சமந்தா அக்கினேனி, ரஷ்மிகா மந்தன்னா ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான பசுமை சவாலை ஏற்றுக்கொண்டதைப் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட நேரத்தில், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு அதே சவாலை ‘உப்பெனா' இயக்குனர் புச்சி பாபு விடுத்தார்.

சவாலை ஏற்றுக்கொண்டு, விஜய் சேதுபதி தனது வீட்டில் ஒரு மரக்கன்று நட்டார், அதன் வீடியோ இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. நடிகர் அதை தனது தனிப்பட்ட சமூக ஊடக சுயவிவரங்களில் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது பல ரசிகர்கள் இப்போது அதைப் பகிர்ந்துள்ளனர்.

வீடியோவில், ‘மக்கள் செல்வன்' ஒரு மரக்கன்று நடுவதையும், அதற்கு நீர் ஊற்றுவதையும், பின்னர் அவரை பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவிப்பதையும் காணலாம். அந்த வீடியோவில் அவர் எப்போதும் போல் எளிமையாக தோற்றமளிக்கிறார். மேலும், சவாலை ஏற்க நடிகர் இதுவரை யாரையும் பரிந்துரைக்கவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் திரைப்படமான ‘மாஸ்டர்' வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, துக்ளக் தர்பார், கடைசி விவாசாய், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற பல படங்களிலும் மற்றும் பிற மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com