முகப்புகோலிவுட்

சாதியை இப்படி ஒழிக்கலாம்; விஜய் சேதுபதியின் யோசனை…

  | February 07, 2019 15:02 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • சீனு ராமசாமி இப்படத்தை இயக்குகிறார்
  • இந்த படத்தில் காயத்ரி நடித்திருக்கிறார்
  • கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது
ரஜினியின் பேட்ட திரைப்படத்தை  தொடர்ந்து விஜய் சேதுபதி இயக்குநர் சீனு ராமசாமியின் ‘மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் போக சூப்பர் டீலக்ஸ், துக்ளக் என அவரிடம் இந்த ஆண்டும் படங்கள் குவிந்து கிடக்கிறது.

சீனு ராமசாமியின் மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. கேரளாவில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி பெண்களுக்கு எந்த இடத்தில் உரிமை மறுக்கப்பட்டாலும் அது தவறுதான் என்று கூறியிருந்தார். மேலும் சாதி ஒழிப்பு குறித்து பேசிய அவர், சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம்தான், சாதி ஒழியும். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், எந்தத் துறையில் இருந்தாலும் அது தவறுதான். பெண்கள், எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நியாயம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரைத்துறையில் இருந்தாலும் கூட சமூக நலனில் அக்கறையுடையவர் விஜய் சேதுபதி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தொடர்ந்து அவர் சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - “இந்த படத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு காதல் தான்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்