முகப்புகோலிவுட்

மலையாள திரையுலகில் என்ட்ரியான விஜய் சேதுபதி

  | December 20, 2018 19:09 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • விஜய் சேதுபதி கைவசம் 8 படங்கள் உள்ளது
 • விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்
 • இதில் ஜெயராமுடன் இணைந்து நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி
‘96' படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இன்று (டிசம்பர் 20-ஆம் தேதி) ரிலீஸாகியுள்ள படம் ‘சீதக்காதி'. பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து விஜய் சேதுபதி கைவசம் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்', சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி', சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல், மாமனிதன்', ரஜினியின் ‘பேட்ட', அருண்குமார் படம், விஜய் சந்தர் படம், சேரன் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இது தவிர விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில், விஜய் சேதுபதி மலையாள திரையுலகில் என்ட்ரியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘Marconi Mathai' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை சனில் கலதில் இயக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஜெயராம் இணைந்து நடிக்கவுள்ளனர். இதனை ‘சத்யம் சினிமாஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 11-ஆம் தேதி துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com