முகப்புகோலிவுட்

நண்பனுக்காக திரைக்கதை வசனம் எழுதும் ‘மக்கள் செல்வன்’.!

  | June 29, 2020 00:12 IST
Kulasami

விமலும் விஜய் சேதுபதியும் கூத்துப் பட்டறையில் ஒன்றாகப் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கூத்துப் பட்டறையில் நடிப்பை பயின்று, புதுப்பேட்டை, குருவி போன்ற படங்கலில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த பிறகு, இயக்குநர் சீனு ராமசாமியின் தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவகாற்று' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும்  தனித் திறமையை வெளிப்படுத்தி, கோலிவுட்டில் தனக்கெட ஒரு இடத்தையும், நல்ல பெயரும், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் ரசிகர் கூட்டத்தையும் பெற்று, தற்போது ‘மக்கள் செல்வனாக' கொடி கட்டி பரக்கிறார். இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள தனது ‘மாஸ்டர்' பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

அதேபோல், நடிகர் விமலும் அவருடனேயே கோலிவுட்டில் வளர்ந்து வந்த நடிகராவார். அவரும் கில்லி, கிரீடம், குருவி போன்ற சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து, பின் ‘பசங்க' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, மஞ்சப்பை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விமலும் விஜய் சேதுபதியும் கூத்துப் பட்டறையில் ஒன்றாகப் பயிற்சி பெற்று, அன்றிலிருந்து ஒரு வலுவான நட்புடன் நீண்ட தூரம் இருக்கின்றனர்.

இப்போது, நடிகர் விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘குலசாமி' என்ற புதிய படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் அவர் இதற்கு முன் பார்த்திராத புதிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com