முகப்புகோலிவுட்

மக்கள் செல்வனின் துக்ளக் தர்பார் - நாளை வெளியாகும் First லுக் போஸ்டர்..!!

  | July 07, 2020 08:00 IST
Makkal Selvan

துனுக்குகள்

 • டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்
 • மேலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன்
 • கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘துக்ளக் தர்பார்' என்று பெயரிடப்பட்டள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் நடிக்க இவர்களுடன் இயக்கநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார்.   96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார்  இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் எனர்ஜி. இந்தக் கவிநய கூட்டணியில் இளைஞர்களின் ஆதர்ச இசைஞர் கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக மஞ்சுமா மோகன் இணைந்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தின் First Look நாளை வெளியாகும் என்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com