முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் 'இடம் பொருள் ஏவல்..!!' - 'லாக் டவுன் முடிந்து வெளியாக வாய்ப்பு..?'

  | May 21, 2020 13:35 IST
Seenu Ramasamy

துனுக்குகள்

  • 2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தமிழ்
  • 'இடம் பொருள் ஏவல்' என்ற படமும் பல ஆண்டுகளாக வெளிவராமல் உள்ளது
  • லாக் டவுன் முடிந்த உடனே இந்த படத்தை உடனடியாக வெளியிட படக்குழு
2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயக்குநர் சீனு ராமசாமி. தான் இயக்கும் படங்களில் சிலவற்றுள் இவர் நடித்தும் வருகின்றார். 'தென்மேற்கு பருவக்காற்று', ‘நீர் பறவை', ‘இடம் பொருள் ஏவல்' 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியது இவரே. 

கடந்த 2019ம் ஆண்டு இவர் இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது நிலவும் இந்த ஊரடங்கு காரணமாக பல படங்கள் வெளியாகாமல் தடைப்பட்டுள்ள நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் நடித்திருக்கும் 'இடம் பொருள் ஏவல்' என்ற படமும் பல ஆண்டுகளாக வெளிவராமல் உள்ளது. 

இந்நிலையில் லாக் டவுன் முடிந்த உடனே இந்த படத்தை உடனடியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை கடந்த 2014ம் ஆண்டே வெளியானது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com