முகப்புகோலிவுட்

'மக்கள் செல்வி நடிப்பில் டேனி' - OTT தளத்தில் வெளியீடு.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

  | July 03, 2020 10:19 IST
Danny In Ott

துனுக்குகள்

 • ‘மக்கள் செல்வி' என்ற பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை வரலக்ஷ்மி
 • நாய் ஒன்று முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. அந்த நாயின் பெயர் தான்
 • ‘டேனி' திரைப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது
‘மக்கள் செல்வி' என்ற பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. அறிமுக இயக்குநர் LC சந்தானமூர்த்தி எழுதி இயக்க, வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டேனி. இப்படத்தில் யோகி பாபு, வினோத் கிஷன், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நாய் ஒன்று முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. அந்த நாயின் பெயர் தான் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மோப்ப நாய் அணியில் ஒரு நாய்க்கும் வரலக்ஷ்மிக்கும் இடையிலான பிணைப்பை இந்த படம் கையாள்கிறது. PG மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

‘டேனி' திரைப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது என சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி OTT தளத்தில் ப்ரீமியர் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com