முகப்புகோலிவுட்

முதல் 2 படங்களிலேயே ரஜினி, விஜயுடன் நடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாளவிகா..!

  | August 05, 2020 00:11 IST
Malavika Mohanan

இந்த லாக் டவுன் காலத்தில் பல சிறப்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசத்தி வருகிறார்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் மாளவிகா மோஹனன். மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா ரஜினிகாந்தின் ‘பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறார்.

நேற்று, தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வந்த வாழ்த்து மழையில் பெருமகிழ்ச்சியடைந்தார். அதே நேரத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் சிறிய உறையாடலில் ஈடுபட்டார். அப்போது, அவர் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ரசிகர் ஒருவர் “மாளவிகா மோகனன் நீங்கள் தமிழில் ரஜினிகாந்த் சர் படத்திலேயே அறிமுகமாகியுள்ளீர்கள் மற்றும் உங்களது இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் உங்களை கோலிவுட்டின் அதிர்ஷ்டசாலி என அழைக்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மாஸ்டர் நடிகை “இதுபோன்ற ஐகான்களுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக உணர்கிறேன், அதுவும் தமிழ் துறையில் எனது முதல் 2 படங்களில்! பேட்டா மற்றும் மாஸ்டரில் பணிபுரிவது போன்ற அற்புதமான நினைவுகள் எனக்கு உள்ளன!” கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு அவர் சமீபத்தில், ரவி உத்யவர் இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க, பெரும் ஊதிய தொகுப்புடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் இந்த லாக் டவுன் காலத்தில் பல சிறப்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com