முகப்புகோலிவுட்

தமிழில் ரீமேக்காகும் புதிய மலையாள ஹிட் படம்..! தனுஷ் நடிக்கிறாரா..?

  | March 17, 2020 12:49 IST
Ayyappanum Koshiyum

மலையாளத்தில் இப்படம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த மலையாள ஹிட் திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்' தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘ஆடுகளம்', ‘ஜிகர்தண்டா' படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் பெற்றுள்ளார்.

ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ஹவில்தார் மற்றும் துணை ஆய்வாளருக்கு இடையிலான மோதலைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சச்சி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். மலையாளத்தில் இப்படம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியானது.

தமிழில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனனுக்கு இணையாகத் திறமை வாய்ந்த நடிகர்களைத் தேடுவதாகத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்