முகப்புகோலிவுட்

பொன்னியின் செல்வனுக்கு முன் பிளாக்பஸ்டர் தொடர்ச்சியை இயக்கும் மணிரத்னம்..?

  | June 01, 2020 19:28 IST
Ponniyin Selvan

‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர் தயாரித்த இப்படத்தில் தான் ஏ.ஆர். ரகுமான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தனது கனவுத் திட்டமான 'பொன்னியன் செல்வன்' படத்தினை இயக்கிவருகிறார். எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் பாலிவுட், கோலிவுட், மாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம், த்ரிஷா, சரத்குமார், ஐஷ்வாயா ராய், விகரம் பிரபு, ரகுமான், லால், ஜெயராம், ஐஷ்வர்யா லட்சுமி, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நிறைவடைந்தது. மேலும் COVID 19 காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்'ஐ மீண்டும் தொடங்குவதற்கு முன் மணிரத்னம் மற்றொரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இப்படத்துக்கு நிறைய நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள், அவை வைரஸ் காரணமாக இப்போது சாத்தியமில்லை.

அதேபோல், நடிகர் அரவிந்த் சுவாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மணி ரத்னத்தின் அடுத்த படம் அவரது உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘ரோஜா' படத்தின் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் எனறு தகவல் வெளியாகியுள்ளது.

‘இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் தயாரித்த இப்படத்தில் தான் ஏ.ஆர். ரகுமான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com